அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி ரயில் நிலையத்தில் மறியல் செய்ய முயற்சி: மாணவர் அமைப்பினர் 30 பேரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் அக்னிபாத் திட்டத்தினை கைவிட கோரி நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மாணவர் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி தரதரவென இழுத்து குண்டுக்கட்டாக  போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை அமல்படுத்தும் வகையிலான திட்டத்தை கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

அக்னிபாத் திட்ட நகல்களையும் போராட்டகாரர்கள் தீயிட்டு கொளுத்திய போது காவல்துறையினர் தடுக்க முயன்ற போது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  தொடரந்து போலீசாரின் தடுப்பை மீறி கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தரதரவென இழுத்து சென்றும் சிலரை குண்டுக்கட்டாகவும் தூக்கி பேருந்தில் ஏற்றினர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories: