வாணியம்பாடி அருகே குடிமகன்களின் கூடாரம் ஆகிப்போன அரசு கட்டிடம்-திறக்கப்படாமலேயே மூடுவிழா கண்ட அவலம்

ஆலங்காயம் :  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியகுரும்பதெரு ஊராட்சிக்குட்பட்ட சின்னகுரும்பதெரு கிராம பகுதியில் கடந்த 2013-14ம் ஆண்டில் ₹10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்ட துவங்கப்பட்ட விபிஆர்சி (வாழ்ந்து காட்டுவோம்) கட்டிடம், கட்டி முடிக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆங்காங்கே இடிந்து விழுந்து, புதர் மண்டி காணப்படும் இந்த கட்டிடத்தின் உள்ளே தினமும் மாலை வேளைகளில், சமூக விரோதிகள் மது அருந்துதல், போதை பொருட்களை பயன்படுத்துதல் மற்றும் கட்டிடத்தின் உட்புறத்தில் நெருப்பு மூட்டி கறி சமைத்து உண்டும், மது அருந்திய பாட்டில்களை கட்டிடத்தின் வெளிப்புறத்தில் உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்ற பகுதி மக்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, திறப்புவிழா காணப்படாமலேயே மூடுவிழா கண்டு சமூக விரோதிகளின் கூடாரமாகிப்போன இந்த கட்டிடத்தை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: