அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு; திட்டமிட்டபடி நாளை கூடுகிறது பொதுக்குழு?.. ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்க திட்டம்?

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு செல்லும் எண்ணம் தற்போது இல்லை என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனிடையே அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஒப்புதலுக்காக 23 தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வத்திடம்  இருப்படைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தகவல் ஏதும் இடம்பெறவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்திடம் தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு செல்லும் எண்ணம் தற்போது இல்லை. தேர்தல் வரும் போது தேர்தல் ஆணையத்துக்கு செல்வோம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

* அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் புறக்கணிக்க வாய்ப்பு

* அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை எதிர்த்த வழக்கில் சாதகமான உத்தரவு வந்தால் புதிய நிலைப்பாடு எடுக்க வாய்ப்பு

* தேர்தல் ஆணையத்திடம் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு எதிராக முறையிட திட்டம்?

* ஓபிஎஸ் பொதுக்குழுவில் பங்கேற்றால் ஒற்றைத் தலைமை தீர்மானம் வரும் பட்சத்தில் வெளிநடப்பு செய்ய வாய்ப்பு

* சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: