தாம்பரம் காவல் ஆணையகர காவல் நிலையங்களுக்கு புதிய குறியீடு அறிமுகம்: கமிஷனர் தகவல்

துரைப்பாக்கம்: சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம், ஆவடி, தாம்பரம் என மூன்றாக பிரிக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் தனியாக இயங்கி வருகிறது.இதன் கீழ் 20 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. சென்னை கமிஷனரகம் பிரிக்கப்பட்டது முதல், சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் இருந்தபோது வழங்கப்பட்ட, வரிசைக்குறியீடுகளுடனேயே செயல்பட்டு வந்தன. தாம்பரம் புதிய கமிஷனராக அமல்ராஜ், பொறுப்பேற்ற பின், இந்த கமிஷனரகத்தில் நிலவும் நிர்வாக சிக்கல்களுக்கு, படிப்படியாக தீர்வு காண முயன்று வருகிறார்.இதன்படி, காவல் நிலையங்கள் மற்றும் கமிஷனர் அலுலகத்திற்கு தேவைப்படும், வாக்கி-டாக்கி’களின் எண்ணிக்கை விபரங்களை கேட்டுள்ளார்.

தொடர்ந்து, 20 காவல் நிலையங்களின் வரிசை குறியீடுகளும் மாற்றப்பட்டுள்ளன. புதிய குறியீடுகளின் படி, போலீஸ் கமிஷனரக பெயரை குறிக்கும் விதமாக, தாம்பரம் முதல் கானத்தூர் வரையிலான காவல் நிலையங்கள், ‘டி’ வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தாம்பரம், வண்டலூர், சேலையூர் ஆகிய, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ‘டபிள்யூ குறியீடு’ வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான, அதிகாரப்பூர்வமான உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    

Related Stories: