விஜய் நடிக்கும் வாரிசு பர்ஸ்ட் லுக் வெளியீடு: பொங்கலுக்கு ரிலீஸ்

சென்னை: விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதுப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்துக்கு தலைப்பு எதுவும் வைக்காமல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. விஜய் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். சரத்குமார், ஷாம், சங்கீதா, ஜெயசுதா உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஐதராபாத், புனே ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில், இன்று விஜய்க்கு பிறந்தநாள். இதையொட்டி நேற்று மாலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதில் கோட்சூட் அணிந்து ஸ்டைலாக விஜய் அமர்ந்துஇருக்கும் போட்டோ வெளியிடப்பட்டது. அத்துடன் இப்படத்தின் தலைப்பும் வெளியானது. இப்படத்துக்கு ‘வாரிசு’ என்று தலைப்பு சூட்டியுள்ளனர். குடும்பக்கதை கொண்ட படமாக இது உருவாகிறது. இதில் ஆக்‌ஷன் மிகக்குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

Related Stories: