தேசிய கல்விக் கொள்கை இடைநிற்றலை அதிகரிக்கும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!

சென்னை: தேசிய கல்விக் கொள்கை இடைநிற்றலை அதிகரிக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக்கோரி அர்ஜுனன் இளையராஜா என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு தலைமை செயலாளர், உயர்கல்வி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்பது எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவு கொள்கையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: