ஒன்றிய அரசின் வஞ்சகத்தை உணர்ந்து எதிர்க்க இந்திய சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ.தேசிய பொது செயலாளர் வேண்டுகோள்

சென்னை: ஒன்றிய அரசின் வஞ்சகத்தை உணர்ந்து எதிர்க்க இந்திய சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொது செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எஸ்.டி.பி.ஐ.கட்சி தேசிய பொதுச் செயலாளர் இலியாஸ் முஹம்மது தும்பே வெளியிட்ட அறிக்கை:ஒன்றிய அரசின் கீழ் உள்ள துறைகளுக்கான ஆட்சேர்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் அறிக்கையின்படி, டிசம்பர் 2021 நிலவரப்படி நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 5.3 கோடியாக இருந்தது. வேலையின்மை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இது 2020ல் 7.11 கோடியாகவும், 2021ல் 7.90 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

இந்த உண்மைகளுக்கு மத்தியில் தான் மீண்டும் தனது பொய்யான மேடை அறிவிப்புகளால் மக்களை ஏமாற்றி இருக்கிறார் பிரதமர் மோடி. இத்தகைய பாசாங்குத்தனத்தையும், மக்கள் விரோத நிலைப்பாட்டையும், ஆட்சியாளர்களின் வஞ்சகத்தையும் உணர்ந்து எதிர்க்க இந்திய சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Related Stories: