உத்திரமேரூரில் 1.50 கோடியில் புதிய மின் மயானம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில் இந்துக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துவந்தனர். அதன்பேரில், மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ₹ 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மயானம் அமைக்க உத்தரவிடப்பட்டது.  அதனடிப்படையில், புதிய மின் மயானம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல் முன்னிலை வகித்தனர்.  பேரூராட்சி செயல் அலுவலர் லதா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ மற்றும் காஞ்சிபுரம் எம்பி செல்வம் கலந்துகொண்டு மின்  மயானம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து மின் மயானம் அமைக்க வரைபடத்தை பார்வையிட்டார்.

பின்னர், மின் மயானம் தரமானதாக விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். நிகழ்வின்போது, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: