சென்னை பல்கலைக்கழகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், இந்தியாவின் சிறந்த 40 கம்பெனிகள் பங்ஙகேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கவுரி தலைமை தாங்கினார். இதில் பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினரும் ராயபுரம் எம்எல்ஏவுமான ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று முகாமை துவக்கிவைத்தனர்.

 

இம்முகாமில் 1500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, அவர்களின் படிப்புக்கேற்ற வேலையை தேர்ந்தெடுத்தனர். சென்னை பல்கலையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் வேலைக்காக அலையாமல், ஒரே இடத்தில் எங்களை அழைத்து வேலைவாய்ப்பு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என மாற்றுத் திறனாளிகள் தெரிவித்தனர். இம்முகாமில் 40க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு படிப்பு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை வழங்கினர்.

Related Stories: