மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!!

மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் இருந்து டிராக்டர்களை ஏற்றிச் செல்ல வந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மதுரை அருகே வாடிபட்டியில் உள்ள டிராக்டர் தொழிற்சாலையில் இருந்து டிராக்டர்களை வடமாநிலங்களுக்கு ஏற்றிச் செல்வதற்காக இன்று அதிகாலை சரக்கு ரயில் வந்தது. மதுரை ரயில் நிலையத்தின் 3வது நடைமேடைக்கு வந்து கொண்டு இருந்த போது, திடீரென சரக்கு ரயிலின் மைய பகுதியில் உள்ள 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி நடைமேடையை உரசி நின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் விபத்து நடந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றனர்.  மதுரை கோட்ட

மேலாளர் பத்மநாபன் ஆனந்தன் தலைமையில் தொழில்நுட்பக் குழுவினர் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பெட்டியை தவிர மற்ற பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

Related Stories: