பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றும் திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் திட்டம் உள்ளிட்டவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா மற்றும் சர்வதேச பொதுசுகாதார மாநாட்டிற்கான அடையாள இலச்சினையை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த மாநாட்டிற்கான இணையதளம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தல், பொதுசுகாதாரம் செய்திமடல் இரண்டாம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. 1969முதல் 2018ம் ஆண்டு வரையான பிறப்பு, இறப்பு பதிவேடுகளை சி.எஸ்.ஆர். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 16,348 பதிவு மையங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: