அன்னவாசல் அருகே கொட்டி தீர்த்த கனமழையால் 40 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை

விராலிமலை: அன்னவாசல் அருகே தொடர்ந்து பெய்த மழையால் 40 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீர் சூழப்பட்டு நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் பெரியகுளம் பரம்பவயல் என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையினால் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீர் சூழப்பட்டு முழு பயிர்கள் நீரில் மூழ்கியது. இதில் சில ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நிலத்தில் இருந்து மேல் எழும்பி நீரில் மிதக்கிறது.

8 செமீக்கு மேல் அப்பகுதியில் பெய்த கன மழையினால் மழை நீர் வயல்வெளியை விட்டு வெளியேற முடியாமல் நிலத்திலேயே தங்கி நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் பழனியப்பா உள்ளிட்டோர் நிகழ்விடத்திற்கு சென்று நீரில் மிதக்கும் நெற்பயிர்களை பார்வையிட்டு அழிந்த பயிர்களின் மதிப்பீடு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

Related Stories: