சென்னை அருகே கிரீன் பீல்டு விமான நிலைய இடம் தேர்வு கூட்டம் ரத்து

சென்னை: சென்னை அருகே கிரீன் பீல்டு ஏர்போர்ட் அமைப்பதற்கான இடத்தை இறுதியாக்குவதற்காக இன்று டெல்லியில் நடக்க இருந்த உயர்மட்ட கூட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவில், இரண்டாவது புதிய நவீன கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால், விமானநிலையத்தில் சுமார் 1.5 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். இதற்காக, தமிழக அரசு சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பன்னூர், பரந்தூர் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பன்னூரில் 4,500 ஏக்கர் நிலமும், பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டன.

இந்த இரண்டு இடங்களில் ஒன்றை முடிவு செய்ய டெல்லியில் இன்று (17ம் தேதி) இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்த  இருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. கூட்டத்தில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்க இருந்தார். அதற்காக அவர் நேற்று மாலை 5.15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லி செல்ல இருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற இருந்த கூட்டத்தை, ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் திடீரென தள்ளி வைத்துள்ளது.

Related Stories: