மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடை வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களுக்கு கோயில் சார்பாக புத்தாடை வழங்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கை: ‘கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றி திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்’ என பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் துறையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் மற்றும் கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில்  மணமக்களுக்கு கோயில் புத்தாடைகள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து கோயில்  நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதியினை கோயில் வரவுசெலவுத் திட்டத்தில்  ஒதுக்கீடு செய்யவும் கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: