மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அக்னி பத் திட்டம்

தண்டையார்பேட்டை: மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அக்னி பத் திட்டம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ள அக்னி பத் திட்டம் குறித்தான அறிமுக கூட்டம் சென்னை கோட்டையில் உள்ள சைனிக் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது லேப்டினட் ஜெனரல் அருண் பேசும்போது, `நாட்டில் தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் இந்த அக்னிபாத் திட்டமானது நேற்று முதல் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். இதற்கு, அடிப்படை கல்வித் தகுதியாக 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் இளைஞர்களுக்கு முதல் 6 மாத காலங்கள் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும். மேலும், நான்கு வருடங்களுக்கும் சேர்த்து அவர்களுக்கு தொகுப்பு ஊதியத்துடன் ரூ.14.4 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இந்த நான்கு ஆண்டு கால பயிற்சி நிறைவடைந்த நிலையில் 25%  பேர் அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய ராணுவ படையில் நியமிக்கப்படுவார்கள்’ என்றார்.

Related Stories: