நங்கநல்லூரில் விழிப்புணர்வு பேரணி பொதுமக்களுக்கு மஞ்சப்பை விநியோகம்

ஆலந்தூர்: கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது. சென்னை ஆலந்தூர் 12வது மண்டல சுகாதார பிரிவு மற்றும் ஆலந்தூர் 167வது வார்டு சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நங்கநல்லூர் சுதந்திர தின பூங்காவில்  நேற்று நடைபெற்றது. இதில் மண்டல சுகாதார நல அலுவலர் சுதா, 167வது வார்டு கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியை ஆலந்தூர் 12வது மண்டல குழு தலைவர் என்.சந்திரன் துவக்கிவைத்தார். இதில் நங்கநல்லூர், பி.வி.நகர், இந்து காலனி, எம்.ஜி.ஆர் சாலைகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகைக்கடை, பழக்கடை ஆகியவற்றில் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்பிறகு நங்கநல்லூர் சுதந்திர பூங்காவை பேரணி வந்தடைந்தது. பேரணியில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான நாஞ்சில் பிரசாத், மண்டல செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர் ஆர்ட்டின் ரோசாரியோ, திமுக கவுன்சிலர்கள் தேவி ஏசுதாஸ், அமுதபிரியா, சாலமோன், திமுக நிர்வாகிகள் உலகநாதன், வெள்ளைச்சாமி, கேபிள் ராஜா, ரமணா, காங்கிரஸ் நிர்வாகிகள் ஐயம்பெருமாள், வடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: