திமுக முன்னாள் எம்.பி கே.கே. வீரப்பன் காலமானார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.கே. வீரப்பன் (76), உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவர், கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை கபிலர்மலை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின் போது, இவருக்கு திமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இதையடுத்து கே.கே. வீரப்பன், கபிலர்மலை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து சில ஆண்டுகள் மாவட்ட தலைவராக பணியாற்றினார். கே.கே. வீரப்பன் உடலுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி., சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: