ஆன்லைன் வர்த்தகத்தை மிகவும் ஆழ்ந்து கருத்தாய்வு செய்து வணிகச்சங்கிலி உடையாமல் அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தை மிகவும் ஆழ்ந்து கருத்தாய்வு செய்து வணிகச் சங்கிலி  உடையாமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா தலைமையில் நடந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாமல்லபுரத்தில் நடந்தது. மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்றார். இதில், 39வது வணிகர்தின மாநில மாநாட்டில் கலந்துகொண்டு வணிகர்களை பெருமைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மாநாடு சிறப்புடன் நடைபெற ஒத்துழைத்த நிர்வாகிகள், மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்று, வணிகர்களின் ஒற்றுமையை உணர்த்திக் காட்டிய வணிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அடித்தட்டு சிறு-குறு வணிகர்களை மட்டுமல்லாது, இந்திய வணிகச் சங்கங்களை பிணைத்து கொண்டு, வாழ்வாதாரத்தை அழித்துவரும் ஆன்லைன் வர்த்தகத்தை மிகவும் ஆழ்ந்து கருத்தாய்வு செய்து வணிகச் சங்கிலி உடையாமல் தடுத்து நிறுத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: