சென்னை: சமக தலைவர் சரத்குமார் வௌியிட்டுள்ள அறிக்கை: வட சென்னை மேற்கு மாவட்டம் எட்ராஜா, வேலூர் வடக்கு மாவட்டம் பழனி, கடலூர் மத்தியம் ஆனந்தராஜ் ஆகிய மூவரும் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட அவைத் தலைவராக செயல்படுவார்கள். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் தையூர் ரமேஷ் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்.