மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜகவினரே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜகவினரே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நபிகள் நாயகம் குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அதேபோல், இக்கட்சி தலைவர்களில் ஒருவரான ஜிண்டால் கூறிய கருத்தும் பெரும் சர்ச்சையானது. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமான், அரபு அமீரகம், ஜோர்டன், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பாகிஸ்தான், மாலத்தீவு, லிபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக திரண்டு உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், நபிகள் பற்றி நுபுர் சர்மா பேசியது அரசின் கருத்து கிடையாது. அது தனிப்பட்ட, கலகத்தை ஏற்படுத்தும் நபர்களின் கருத்து என்று இந்தியா விளக்கம் அளித்தது. எனினும், அரசுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, நுபுர் சர்மா பாஜவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனினும், இதனை ஏற்க மறுத்த முஸ்லிம்கள், நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் இன்று தொழுகையை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், கர்நாடகா, தெலங்கானா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஜார்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறிய நிலையில், பதற்றமிக்க பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனிடையே கலவரம் ஏற்பட்ட ஹவுரா பகுதிக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்தா மஜூம்தாரை மாநில போலீசார் கைது செய்தனர். பாஜக தலைவர் ஹவுரா சென்றால் மேலும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவரை தடுப்புக்காவலில் கைது செய்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜகவினரே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இது குறித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இதற்கு முன்னரும் இதனைக் கூறி இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக வன்முறை காரணமாக ஹவுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. பா.ஜ.க.வினர் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: