மணலி மண்டல குழு கூட்டத்தில் 96 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவொற்றியூர்: மணலியில் நேற்று மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகரட்சி, மணலி மண்டல அலுவலகத்தில் நேற்று மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உதவி கமிஷனர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். இதில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்று, தங்கள் வார்டுகளில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.

இதைத் தொடர்ந்து, 15வது வார்டான எலந்தனூர், வீதியில் ரூ.91 லட்சத்தில் புதிய பூங்கா, 150 அடி சாலை இந்து மயான பூமியில் ரூ.1.9 கோடியில் நவீன எரிவாயு தகனமேடை, 16வது வார்டான மணலி புதுநகர், தணிகை நகரில், ரூ.1.30 கோடியில் பூங்கா அமைத்தல், 15 முதல் 22 வரையிலான வார்டுகளில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் கோட்ட, பகுதி, மண்டல அலுவலகங்கள், பொது கழிப்பிடம், சாலை, பூங்கா அமைத்தல் உள்பட 96 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Related Stories: