வணிக நிறுவனங்களுக்கு நேரக்கட்டுபாடு தளர்வு: விக்கிரமராஜா வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 2019ம் ஆண்டு அரசாணையின்படி கடைகள் 24 மணிநேரமும் இயங்கிட அனுமதி அளித்து, பணப்புழக்க பெருக்கத்திற்கும், அரசு வருவாய்க்கும், பொருளாதார மீட்புக்கும் வழி செய்வதோடு, பொதுமக்கள் வேண்டும் நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்திட வழிவகுத்திடவும் வேண்டுமென தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழுத்தம் கொடுத்து வந்தது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பேரமைப்பின் 39வது வணிகர்தின மாநில மாநாட்டிலும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.  அதனை தொடர்ந்து தமிழக அரசு ஜூன் 5ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் 24 மணி நேரமும், உரிய வழிகாட்டுதல்களோடு, வணிக நிறுவனங்கள் இயங்கிட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டிருப்பது, வணிகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்கள் மற்றும் பயனீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்க முடிவு. இதை நன்றியுடன் வரவேற்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: