நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள் சாலை, விளைநிலங்களில் கொட்டியதால் பாதிப்பு

* நோய் தொற்று பரவும் அபாயம்

* நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி: நெமிலி அடுத்த பனப்பாக்கம் அருகே கோழி இறைச்சி கழிவுகள் சாலைகள் மற்றும் விளை நிலங்கள், நீர் செல்லும் கால்வாய்களில் கொட்டியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு  நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேரூராட்சியில் செயல்பட்டுவரும் கோழி இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகளை பனப்பாக்கம் பகுதிகளில் இருந்து பெருவளையம் செல்லும் சாலை பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து கொசஸ்தலை  ஆற்றுக்கு செல்லும் கால்வாயில் தண்ணீரில் இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

 இதனால் விவசாய நிலங்கள் மற்றும்   தண்ணீர் மாசு அடைவதால்  விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படுகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கோழி இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள்  கொட்ட வேண்டிய இடத்தில் கொட்டப்படாமல் விளைநிலங்களில்  மற்றும் ஏரி கால்வாய்களில் கொட்டுவதால்  ஆடு, மாடு தண்ணீர் குடிக்கும் தண்ணீரில் இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் தண்ணீர் பாதிப்படைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.மேலும் சாலை பகுதியில் கொட்டுவதால் போக்குவரத்தில் செல்லும் வாகனங்களில் காற்றில் கோழி இறகுகள்  பறந்து வாகன ஓட்டிகளுக்கு முகத்தில் படுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது.இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: