கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு

சென்னை:ஆவடி அடுத்த மிட்டணமல்லியை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத். இவர், கோயிலை சீரமைக்கப் போவதாகக்கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடிசெய்ததாக புகார் தரப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கடந்தவாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கார்த்திக் கோபிநாத், ஜாமீன்கோரி கடந்த வாரம் பூந்தமல்லி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் மனுவை தள்ளுபடி செய்தார் போலீசாரின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மீண்டும் ஜாமீன்கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் கார்த்திக் கோபிநாத் நேற்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், கார்த்திக் கோபிநாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: