ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை; ஆறுமுகசாமி ஆணையம் ஒரு மாதம் 7 நாட்கள் கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம்.!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆணையம் ஒரு மாதம் 7 நாட்கள் கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

வரும் 24-ஆம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் அறிக்கையை தயார் செய்ய அவகாசம் இல்லை என்பதால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சமீபத்தில் நிறைவடையாக நிலையில், அறிக்கையை தயார் செய்யும் பணியை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

Related Stories: