ஊரப்பாக்கம் ஏரியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும்: தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சட்டவிரோதமாக கழிவுநீரை, நீர்நிலைகளில் விடுவது மற்றும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவது தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, 2021ல் அதன் ஆய்வின்போது, 562 வீடுகள் ஏரியை ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், ‘ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றும் வகையில் தமிழ்நாடு குடிசைமாற்று  வாரியம் வரையறை செய்துள்ளது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் செயல்முறை தாமதமானது’ என வருவாய்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட குழுவிடம் தெரிவித்தனர். பிறகு, மே 30ம் தேதி நடந்த வழக்கின் இறுதி விசாரணையின்போது வருவாய், உள்ளாட்சி அமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை முடிக்க 6 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

மேலம், இந்த பரிந்துரையை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபடுவதைத் தடுக்க சுற்றுச்சூழல் வேலிகள் அல்லது உயிரியல் பன்முகத்தன்மை பூங்காங்கள் போன்றவை அமைத்து நிரந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டனர். புதிதாக குப்பை கொட்டப்படுவதை பொறுத்தமட்டில் காட்டாங்கொளத்தூர் பஞ்சாயத்து கூட்டுக் குழுவிடம் கூறும்போது, தனியான குப்பை கிடங்கில் கொட்டப்படும் திடக்கழிவுகளை வீடு, வீடாக சென்று சேகரிக்கும் பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளனர். இப்பகுதியில், உற்பத்தியாகும் கழிவுநீர் ஏரியில் விடப்படாது. மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் கழிவுநீர் பாதைகளில் விடப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ20 கோடியில் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது என உள்ளாட்சி மற்ற இறுதி விசாரணையின்போது தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏரியின் மாசு அளவை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏரியில் இருந்து மாதிரிகளை சேகரித்து ரசாயனம் மற்றும் பாக்டீரியாவின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. இதன் அடிப்படையில் தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால், எதிர்காலத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறினால் அபராதம் விதித்து உள்ளூர் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.   

Related Stories: