கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் பேருந்து நிறுத்த நிழல் குடையாகிய தண்ணீர் பந்தல்கள்

கூடுவாஞ்சேரி: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டி போட்டு கடந்த மாதம் தண்ணீர் பந்தல் அமைத்தனர். இதில், தற்போது பானையும் இல்லை. தண்ணீரும்  இல்லை. இதனால், கொளுத்தும் வெயில் தாங்க முடியாமல் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழலுக்காக தண்ணீர் பந்தலில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் தண்ணீர் பந்தல் பெயருக்காக திறந்து வைக்கின்றனர். ஆனால், தண்ணீர் பந்தல் திறந்த சில தினங்களிலேயே அந்த தண்ணீர் பந்தலுக்குள் பானையும் இல்லை. தண்ணீரும் இல்லை. இதனால், அங்கு கொளுத்தும் வெயிலில் கோடை வெயில் தாங்க முடியாமல் தாகத்திற்காக தண்ணீர் அருந்துவதற்கு அந்த தண்ணீர் பந்தலுக்கு பஸ் பயணிகள் வருகின்றனர். ஆனால், அந்த தண்ணீர் பந்தலுக்குள் தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் வேறு வழியின்றி கொளுத்தும் வெயில் தாங்க முடியாமல் அந்த தண்ணீர் பந்தலுக்குள் பஸ்சுக்காக தஞ்சமடைந்து காத்து நிற்கின்றனர். இதனால், தண்ணீர் பந்தல் தற்போது நிழல் குடையாக மாறி உள்ளது என்றனர்.

Related Stories: