ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது ஆப் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பு அதிகரிக்க முடிவு: இந்திய ரயில்வே தகவல்

சென்னை: பயணிகளுக்கு வசதியாக ஆதார் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 டிக்கெட்டுகளாகவும், ஆதார் உடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 12 டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 அதிகரிக்க இந்தியா ரயில்வே முடிவு செய்துள்ளதாகவும் மற்றும் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரி செய்யபடுவார் என தெரிவிக்கப்பட்டுகிறது.  

இதற்கு முன்பு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் ஆப் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயனர் ஐடி ஆதார் இணைக்கப்படாத பயனர் ஐடி மாதத்துக்கு அதிகமாட்சமாக 6 டிக்கெட்களும், ஆதார் உடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி அதிகமாட்சமாக 12 டிக்கெட்களும் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பு தான் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. தற்பொழுது இது அதிகரிக்க படுவதாக இந்தியா ரயில்வே தரப்பில் அறிவிப்பை வெளியிட்டுயுள்ளனர். இதில் ரயில் பயணிக்கும் பயனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: