திருவள்ளூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச கலைஞர் உணவகம் திறப்பு

திருவள்ளூர்: கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஏற்பாட்டில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் ஓராண்டு முழுவதும் தொடர்ந்து ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் இலவச கலைஞர் உணவகம் திறக்கப்பட்டது.விழாவிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி கலந்துகொண்டு ஒராண்டிற்கான இலவச கலைஞர் உணவக திட்டத்தை தொடங்கி வைத்தார். ஏழை, எளியோர், ஆதரவற்றோர் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களையும் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.

திருவள்ளூர் தேரடியில் கலைஞரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும் நகராட்சி கவுன்சிலருமான டி.கே.பாபு ஏற்பாட்டில் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன்,எஸ்.கே.ஆதாம், களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், ப.சிட்டிபாபு, சி.சரஸ்வதி சந்திரசேகர், யு.சிவசங்கரி, ஐ.சந்திரசேகரன், மு.நாகன், நகர செயலாளரும் நகரமன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், எஸ்.மகாலிங்கம், மோ.ரமேஷ், கே.அரிகிருஷ்ணன், டி.கிறிஸ்டி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.திருவள்ளூர் கோட்டம், காக்களுர் மின் வாரிய அலுவலகத்தில், கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தொமுச திட்ட தலைவர் சிட்டா, வாசுதேவன் தலைமையில் இனிப்பு வழங்கினர்.

Related Stories: