வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் சென்னையில் உழவர் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தொடங்கி வைத்தார். உலக வங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழகத்தின் 31 மாவட்டங்களில், 120 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 3,994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 22 உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு பசுமை விருதுகளையும், 16 நிறுவனங்களுக்கு பசுமை விருது மற்றும் பசுமை உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு மானியமாக ரூ.1.50 - 2.50 லட்சமும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய  கருப்பண்ணன் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், ‘‘உழவர்கள் தாங்கள் உருவாக்கிய பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய இந்த கண்காட்சி பெரும் உதவியாக இருக்கும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையிலும் இங்குள்ள பொருட்கள் உள்ளன. இத்தகைய செயல்பாடுகளை செய்ய உலக வங்கி கடன் களை அளித்து வருகிறது. அதனை பயன்டுத்தி பல பொருட்களை உற்பத்திசெய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: