கோயிலை புனரமைக்க பணம் வசூல் யூடியூபர் கார்த்தி கோபிநாத் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஆவடியை சேர்ந்த யூடியூபர் கார்த்தி கோபிநாத். இவர் கோயிலை புனரமைப்பதாக கூறி பலரிடம் பல லட்சம் வசூலித்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் யூடியூபர் கார்த்தி கோபிநாத்தை கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவரது சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்த நிலையில் கார்த்தி கோபிநாத் ஜாமீன் மனு மீதான விசாரணையை நிறுத்தி வைப்பதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. இதில் கார்த்தி கோபிநாத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்தனர். இதனால் கார்த்தி கோபிநாத் மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு மீது விசாரணை 2ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

Related Stories: