அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அவலம் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்: பழங்குடி மக்களுக்கான நிதியை திருப்பி அனுப்பிய அதிமுக அரசு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பழங்குடி மக்களின் நலத்துறை அளிக்கப்பட்ட ரூ.265 கோடி நிதி பயன் படுத்தாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டது தகவல் அறியும் உயிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. அந்த தொகை வனத்துறை, உரகவளர்ச்சி துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உயிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 265 கோடி நிதியை பயன் படுத்தாமல் திருப்பி கொடுத்து உள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் பழங்குடி நலத்துறை தொர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு விவரங்களை பெற்றுள்ளார்.

அதில் 2018-2019, 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் 1310 கோடிகள் வரை நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில்  ரூ. 265 கோடி நிதி பயன் படுத்தாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. வேற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் மக்களின் அடிப்படை தேவைகளான நில உரிமை பட்டா, வீடு, கல்வி, சுகாதார திட்டங்கள், மின்சாரம், சாலை வசதிகள் என்று பல்வேறு வளர்ச்சி  திட்டப்பணிகள் முழுமைபெறாமல் பழ ஆண்டுகள் நிலுவையில் உள்ள நிலையில் இவ்வாறு இந்த மக்கள் என ஒதுக்கப்படும் நிதியையும் பயன் படுத்தாமல் திரும்ப ஒப்படைப்பு செய்யும் தகவலானது விளையாகி உள்ளது.  

Related Stories: