சார்தாம் யாத்திரைக்கு மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதியுங்கள்: உத்தரகாண்ட் சுற்றுலா துறை செயலர் வேண்டுகோள்

சென்னை: உத்தரகாண்ட்டில் உள்ள 4 புனித தலங்களுக்கு செல்லும் சார்தாம் யாத்திரை மிகவும் புகழ் பெற்றது. இது, அமர்நாத் யாத்திரையை போல் ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டும் இல்லாமல், ஒரு வருடத்தில் 6 முதல் 7 மாதங்கள் வரை நடைபெறும். இந்நிலையில், யாத்திரைக்கு மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யும்படி உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை செயலர் திலீப் ஜாவல்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:  சார்தாம் யாத்திரைக்காக உத்தரகாண்ட் வரும் பக்தர்கள் போலியான முன்பதிவுகளை நம்பி ஏமாற வேண்டாம். உத்தரகாண்ட் மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான அவகாசம் அக்டோபர் மாதம் வரை உள்ளது. சிலர் டேராடூன் சுற்றுலாத்துறையை ஏமாற்றும் வகையில், உண்மையான முன்பதிவு விண்ணப்பத்தை நகல் எடுத்து அதில் படங்கள், தகவல்களை தங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்து பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்று போலி முன்பதிவு செய்தவர்கள் யாத்திரைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆன்லைன், மொபைல் ஆப் மூலமாக பக்தர்கள் சார்தாம் யாத்திரைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: