பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி தலைமை செயலகம் நோக்கி பாஜவினர் பேரணி

சென்னை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பாஜவினர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒன்றிய அரசு சமீபத்தில் குறைத்து அறிவித்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம், பெட்ரோல் விலை ரூ.9.50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாநில அரசுகளும் உள்ளூர் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை பலமுறை உயர்த்திவிட்டு தற்போது அதில் 50% மட்டும் குறைத்து, மாநிலங்களைக் குறைக்கச் சொன்னால் எப்படி செய்ய முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி, நேற்று கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று மாநில பாஜ தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியாக சென்றனர். இதையடுத்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் தலைமை செயலகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் எச்.ராஜா, வினோஜ் பி.செல்வம், சதீஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: