நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்: ஐகோர்ட்டில் பொதுநல மனு

சென்னை: பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 2013ம் ஆண்டு அம்மா உணவக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் தனியார் உணவகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சாதாரண பயணிகளால் இந்த விலையில் உணவுகளை வாங்க முடியாது. எனவே, பயணிகளுக்கும், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகன டிரைவர்கள், ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் வகையில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்.  போக்குவரத்து அல்லாத வாகனங்களில் ஓட்டுனர்கள் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள். சாலையோர உணவகங்களில் அதிக விலை கொடுத்தாலும், அவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதில்லை. சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்களை அமைக்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: