தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு கூட்டம்

தாம்பரம்: தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி  உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு டி.காமராஜ், இ.ஜோசப் அண்ணாதுரை, எஸ்.இந்திரன், ஜெயபிரதீப் சந்திரன், வே.கருணாநிதி ஆகியோர் மண்டல தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், குரோம்பேட்டையில் உள்ள 2வது மண்டலமான பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் இதற்கு முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமை தாங்கினார். 2வது மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பல்லாவரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் வளர்ச்சி பணிகளான சிறுபாலங்கள் அமைத்தல், சாலை சீரமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிக்கு மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டபணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: