ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க கவுன்சிலர் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க கவுன்சிலர் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள் வலியுறுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன இப்பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பேரூராட்சி மன்ற  கூட்டம் மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில்  பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் அனைத்து கவுன்சிலர்கள் பேசுகையில் ஆரணி பேரூராட்சியில் நீண்ட வருட காலமாக பேருந்து நிலையம் இல்லாத காரணத்தினால் இப்பகுதி மக்கள் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அரசு அலுவலர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் ஆரணி பேரூராட்சிக்கு பேருந்து நிலையம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்து பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் திமுக கவுன்சிலர்கள் கண்ணதாசன், பொன்னரசி, ரகுமான்கான், திமுக அதிமுக கவுன்சிலர் சந்தான லட்சுமி, மற்றும் கவுன்சிலர்கள் சதீஷ், முனுசாமி, குமார் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் முருகவேல் நன்றி கூறினார்.

Related Stories: