விக்ரம் படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனம் நீக்கம்

சென்னை: விக்ரம் படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனத்தை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்துள்ள படம் விக்ரம். வரும் ஜூன் 3ம் தேதி படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பியிருந்தனர். படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனம் இடம்பெறுகிறது. இதையடுத்து அந்த வசனத்தை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் விஜய் சேதுபதி, ஒருவரை கத்தியால் குத்தி கொல்லும் காட்சியில் வன்முறையை குறைக்கும் விதமாக காட்சியில் சில இடங்களை நீக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிபந்தனைகளை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் சில ஆபாச வசனங்களில் மியூட் தரப்பட்டது. இதுபோல் 10 காட்சிகளில் ‘கட்’ தரப்பட்டுள்ளது. இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: