சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்த பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது: போலீஸ் விளக்கம்..!!

சென்னை: இளைய பாரதம் யூடியூப் சேனலை நடத்திவரும் பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்த பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான உப கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, கார்த்திக் கோபிநாத் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அறநிலையத்துறை அனுமதி பெறாமல் மக்களிடம் ரூ.34 லட்சம் வசூலித்து, அங்கு புனரமைப்பு பணி மேற்கொள்ளவில்லை. கார்த்திக் கோபிநாத்  கடவுளின் பெயரை சொல்லி பண வசூலில் ஈடுபட்டு மோசடி செய்ததாக கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரை விசாரித்த ஆவடி போலீஸ் பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் கார்த்திக் கோபிநாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அம்பத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன்பு கார்த்திக் கோபிநாத் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.

Related Stories: