ரூ. 50 லட்சம் மோசடி: யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது, பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி இணையதளத்தின் ரூ. 50 லட்சம் வசூலித்து மோசடி:  யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது

ரூ. 50 லட்சம் மோசடி புகாரில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கார்த்திக் கோபிநாத் கடவுளின் பெயரை சொல்லி வசூலில் ஈடுபட்டு மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டு இருத்தது. சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி இணையதளம் வழியாக ரூ. 50 லட்சம் வசூலித்து மோசடி செய்த புகாரில் கார்த்திக் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.  யூடியூபர் சேனல் நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் சிறுவாச்சூர் கோயிலை மாற்ற மதத்தினர் இடித்துவிட்டதாக புகார் கூறி வசூலில் ஈடுபட்டு வந்தார்.  இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் ரூ. 50 லட்சத்துக்கு மேல் வசூலித்துக் கொண்டு அங்கு எந்த புனரமைப்பு பணியும் மேற்கொள்ளவில்லை.

பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருப்பது அவரது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சென்னையில் அறிமுகப்படுத்தியிள்ளார். அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டம்  சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாக கூறி மோசடி நடைபெற்றது. பாஜக ஆதரவாளரான கார்த்திக் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: