ரஜினி, கமல் திடீர் சந்திப்பு

சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் திடீரென்று நேரில் சந்தித்துப் பேசி யிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் சந்தித்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘விக்ரம்’. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட பிறகு சினிமாவில் நடிக்காத கமல்ஹாசன், கடைசியாக 2018ல் ‘விஸ்வரூபம் 2’ படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து அவர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் வெளியாகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை திடீரென்று அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்த கமல்ஹாசன், தனது ‘விக்ரம்’ படத்தின் வெளியீடு குறித்து பேசி அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். அப் போது லோகேஷ் கனகராஜ் உடனிருந்தார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், ‘ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் நன்றி. உங்கள் இருவரின் நட்பும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. லவ் யூ சார்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: