தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுகள் தள்ளுபடி.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரி இயக்குநரும், நடிகருமான  எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறையினர் சார்பில் 6 வழக்குகளை தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி நடிகர் எஸ்.ஜே.சூர்யா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வருமான வரி கணக்குக்கான மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால் வழக்குகளை ரத்து செய்யுமாறு நடிகர் எஸ்.ஜே.சூர்யா சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால் முறையான சோதனைக்கு பிறகு நடிகர் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி தாக்கல் செய்யாததால் வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி அவரது மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: