குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக நேற்று மாலை கல்லணை வந்து சேர்ந்தது. பின்னர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் மதகின் பொத்தானை அழுத்தி அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டு மலர்கள், விதைகளை தண்ணீரில் தூவினர்.

கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாற்றில், கொள்ளிடத்தில் வினாடிக்கு தலா 500 கன அடி, கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 150 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 93,860 ஏக்கர், நாகை மாவட்டத்தில் 19,760 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 86,450 ஏக்கர், கடலூர்மாவட்டத்தில் 24,700 ஏக்கர், அரியலூர் மாவட்டத்தில் 2,470 ஏக்கர் என 3லட்சத்து 38ஆயிரத்து 390 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: