கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

திருவாரூர்: கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார் என   ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவாரூர் மத்திய பல்கலை.யில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைத்தார். தேசிய கல்விக்கொள்கையை அனைத்து பல்கலை.யிலும் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி கருத்தரங்கில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி; தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் அடிப்படை தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துணைவேந்தர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கல்வி கொள்கைகள் அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார். புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தினால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். விரைவாகவும், சமூகமாகவும், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: