சென்னை : சினிமாவில் தன் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள கலைஞர் கருணாநிதி முக்கிய காரணம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் விக்ரம் படம்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன் சினிமா என்பது உலகளாவிய தனி மொழி அது எழுதுவதற்கு தனித்திறமை வேண்டும் என்னுடைய தனித்திறமையை வளர்த்துக்கொள்ள கலைஞர் கருணாநிதி முக்கிய கரணம் என்றார்.