சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமிர்த ஜோதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: