அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இம்மாதத்தில் 42 பேர் பணி ஓய்வு

சென்னை: அரசு போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடப்பு மாதத்தில் 42 பேர் பணி ஓய்வு பெறுகின்றனர். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘போக்குவரத்துக்கழகத்தில் 42 பேர் பணி ஓய்வு பெறுகின்றனர். மேற்படி பணியாளர்களை வரும் 31ம் தேதி பிற்பகல் உத்தரவின்படி பணியிலிருந்து விடுவிக்குமாறும், இவர்களின் பணி விடுவிப்பு நகல் மற்றும் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான வருகைப்பதிவேட்டின் விவரத்தை மனிதவள பிரிவிற்கும், சம்பள பட்டியல் பிரிவிற்கும் அனுப்பி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட பிரிவு மற்றும் கிளை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: