பைக் மீது லாரி மோதி கணவன் கண்முன் மனைவி பரிதாப பலி

புழல்:  புழல் கண்ணப்பசாமி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பூஜா(30), தனியார் கல்லூரி உதவி பேராசிரியை, நேற்று மாலை பணி முடித்து தனது கணவருடன் பைக்கில் வீட்டிற்கு சென்றகொண்டிருந்தார். புழல் காவல் நிலையம் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது, மாதவரத்திலிருந்து செங்குன்றம் நோக்கி வந்த லாரி பைக்கின் பின்புறத்தில் வேகமாக  மோதியது. இதில் பூஜா தூக்கிவீசப்பட்டு கணவன் கண்முன் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். புகாரின்பேரில் மாதவரம் போலீசார் லாரி டிரைவர்  சக்திவேலை(26) கைது செய்தனர்.

Related Stories: