விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (27ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்க உள்ளனர்.

எனவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண் தொடர்பான தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும், பிரதான் மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் இணைய வழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன்கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1, இணையவழி சிறு / குறு விவசாய சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், நிலத்தின் பரப்பளவு, பட்டா நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: