வாகனம் கவிழ்ந்து 3 பேர் காயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே நுங்குகளை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், டிரைவர் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (39). சொந்தமாக சரக்கு வாகனம் வைத்துள்ளார். இந்நிலையில் பரமசிவம், சென்னையில் நுங்கு விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது வாகனத்தில் நுங்குகளை ஏற்றி கொண்டு நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டார். அவருடன், அதே பகுதியை சேர்ந்த 2 பேர் பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பின்னால் வந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக பரமசிவம், இடதுபுறம் வாகனத்தை திருப்பினார். இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தறிக்கெட்டு ஓடி, சாலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த 3 பேரும், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு காயமடைந்த 3 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

Related Stories: